Friday, November 11, 2022

Sri.N.Sivasta

 Sri.N.Sivasta


"From dust we have come and unto dust we return."


Original poem in Tamil by R.M. Nowsaath shared here with his prior permission alongside my English translation:


#1


#THREE_FISTFUL_OF_SOIL


Throw 

those three fistful of soil

and me as well.


Close the chasm

and move away. 


Do you know 

if it is

a flower garden in Heaven 

or a cavity in Hell?


A burial pit could also become 

a trench for torture.

A poem could also be found 

inside a grave.


The earth

which created me

is itself

eating me.


~Sri 17:00 :: 11112022 :: Noida 


✍️


#மூன்று_பிடி_மண்


எறியுங்கள் அந்த

மூன்று பிடி மண்ணையும்

என்னையும்..


அகழியை மூடிவிட்டு

அகன்று விடுக..


அது

சுவனத்தின் பூஞ்சோலையோ

நரகத்தின்

ஒரு பொதும்போ அறிவீரோ.. 


புதை குழி 

ஒரு வதை குழியும் ஆகலாம்

கபுறுக்குள் ஒரு

கவிதையும் கிடைக்கலாம்


என்னைப் படைத்த

மண்ணே

என்னைத்

தின்று கொண்டிருக்கிறது..


✍️ #தீரன்_2022

Friday, May 13, 2022

மூஸாவின் ஆஸா

 மூஸாவின் ஆஸா

--------------------
யா மூஸாவே,
எங்கள் இறைதூதரே,
தங்கள் கைத்தடியைக்
கொஞ்சம் தருவீராயின்,
இம்மன்றத்துள் எறிந்து
இருநூறு பாம்புகளையும்
விழுங்கி விட...
தியவன்னா வாவியில்
அடித்து
இரண்டாகப் பிளந்து
இருநூறையும்
தள்ளிப் புதைக்க..
இருநூறு மந்தைகளையும்
ஆதம்மலை
உச்சிக்கு ஓட்டிச் சென்று
அங்கிருந்து தள்ளிவிட .
யா மூஸாவே,
எங்கள் இறைதூதரே,
தங்கள் கைத்தடியைக்
கொஞ்சம் தருவீராயின்.....
O
தீரன்....


யாஹூ5

 ஏகும் தலம்

➖➖➖➖
சாகுந்தலம் படைத்தவன்
போகுந்தலம்
நெருங்கும் நேரம் இது.
இனி
ஏகும் தலம்
ஏகி ஆவதென்ன..
நரக நெருப்பெனும்
வேகும்தலம் நோக்கிப்
போகும் தளம்
போவதுமுண்மை.
நோகும் பாவமெலாம்
ஒரு சொட்டுக் கண்ணீரில்
மாயும் மாயம் அறிவீரோ
அது
ஆகும் போது
உனதருட் காட்சி
காணும் வகை செய்வாயோ..
கண்ணே ரஹ்மானே..
0
✍️ தீரன்.

ஒளிமயம்
➖➖➖➖
பேரொளியியின் சந்நிதியில்
ஓரொளி
அது நூரொளி..
ஈரொளியும் நேரொளியாய்
நின்றொளிரக்
காணொளியில்
காண்பது போலக்
கண்ணொளிரக் கண்டது..
நூரொளியின் வருகையால்
பாரொளிர்ந்தது.
பாரொளிர்ந்ததால்
விண்வெளி முழுவதும்
முஹம்மதெனும் பேரொலித்தது..
0
✍️ தீரன்..

அகத் தீ
➖➖➖
கொழுத்திப் போட்டது
கொழுந்து விட்டெரிகிறது
தீபமாய் எரிந்தது,
தீப்பற்றிக் கொண்டது
சுடராய்த் தொடங்கியது
சூழ்ந்து பற்றிப்
பரவி விட்டது.
சில காலம்
நீறு பூத்திருந்தது
இன்று
நெருப்பாய் எரிகிறது
காழ்ந்து எரிந்து, மனக்
காடு முழுவதும்
கருகி விட்டது
தணியாமல்,
கனன்று கொண்டே இருக்கிறது,
உன்னைப்,'பற்றி'
என்னில் பற்றிய
நினைவுப் பெரு நெருப்பு.
0
✍️தீரன்

வக்கிர வதை
➖➖➖➖➖
வெட்டிய மின்னலை
விழிகளில் ஏந்துகிறேன்
கொட்டிய நெருப்பினை
கொதிப்புடன் விழுங்குகிறேன்
திட்டிய மொழியெல்லாம்
திகைப்புடன் சகிக்கின்றேன்
முட்டிய மோதலை
முழுதாய் தாங்குகிறேன்
குட்டிய போதெல்லாம்
குனிந்தே இருக்கிறேன்
எட்டியவள் உதைத்த போது
எல்லாம் வாங்குகிறேன்
வெட்டிய கபுருக்குள்
வைக்கும் நேரமிதோ
யானறியேன்..
0
✍️ தீரன்..

சாக்கணம்
➖➖➖➖
இக்கணமே வருக
இஸ்ராயீலே,
கொத்தித் தின்கிறது
கொடும் கழுகு ஒன்று
அண்டம் முழுக்க
கத்திக் கலைக்கிறது
அண்டங்காகம்
விரட்டிக் கடிக்கிறது
விசர் நாய் ஒன்று
புரட்டிப் போட்டுப்
பிடுங்கி எடுக்கிறது புலி
சீறிப் படமெடுத்து
ஊறிய விஷத்தை
உயிரில் துப்புகிறது நச்சரவம்
இன்னும்,
எத்தனை காலம்
இத்தனை கொடுமை..
இக்கணமே வருக
இஸ்ராயீலே....
0
✍️தீரன்...

யாஹூ-5

 


முற்றும்
∞∞∞∞∞

விடிந்து விட்டது
இனி
விளக்கை அணை.

ஒடிந்து விட்டது
ஒட்டுவதற்கில்லை,
ஜீவநீர்,
வடிந்து விட்டது
விழியை மூடு.

இடிந்து விட்டது
இணக்க முடியாது..
நிரந்தரமாய்ப் 
படிந்து விட்டது
பறக்க இயலாது

மடிந்து விட்டது
மண்ணைப் போடு-இடுப்
பொடிந்து விட்டது
இருகை ஏந்து 

எல்லாம்,
முடிந்து விட்டது
மூட்டையைக்  கட்டு..
0
✍️தீரன்
ஒடுங்கியிருத்தல்..
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
பறந்து விடாதே
என் பட்டாம்பூச்சியே..
உள்ளங்கையில்
நீ எழுதும் ஒரு கவிதை..
எனக்குச் சில
உண்மைகளை சொல்கிறதே..
அற்பப்
புழுவாக இருந்தாய்
கூட்டுக்குள்ளே சிலகாலம்
ஆன்மத் தவமிருந்தாய்
வர்ண வரம் பெற்று
வெளிவந்து சிறகடித்தாய்
இழி பிறவி நானும்
இருட் குகையில் போயிருந்து,
இறைதுதித்தொருநாளில்,
வர்ணச் சிறகுகள் பெறுவேன்
வந்துன்
வாசலில் வட்டமடிப்பேன்..
0
✍️தீரன்..


திருக்கோலம்
-----------
வானில் பறந்ததெல்லாம்
சும்மா
வீணில் பறந்ததுவா..
கானில் காண்பதெல்லாம்
கணத்தில்
காணாமல் போவதும்தான்
தூணிலும் துரும்பிலும்
ஆணிலும் பெண்ணிலும்
மறைந்தொரு நாடகம் நானிலத்தில் நாடுவதுமேன்..
ஏனிந்தக் கோலம்
எடுத்தாடும் திருக்கோலம்...
தன்னில் தனக்காய்த்
தானாடும் தன்மையுமேனோ..
அருளன்பு கனிந்தருளத்
தானிந்தக் கூத்தெல்லாம்..
O
✍️தீரன்..\

படிமுறை
................
முறைப்படி
ஏணிப்படி ஏறாமல்
ஏனிப்படி ஆனேன்.?
படிப்படியாய் ஏறியிருப்பின்
உருப்படியாய்
ஏறும்படி இருந்திருக்கும்
படிதாண்டித்
தப்படி வைக்கப்
படி தவறித்
தவறும்படி ஆனதெப்படி..
இப்படி இந்த
விதிப்படி செல்லாது,
செப்படி வித்தைச்
செல்படியாகுமோ..
நல்லபடி சொன்ன
சொற்படி ஏறாதிப்படி
விழும்படி ஆயிற்று..
இனி
எப்படி ஏற...?
O
✍️தீரன்

இரவின் விடுதலை
°°°°°°°°°°°°°°°°°°°°°°
எந்த ரொட்டியில்
யாருடைய பெயரோ..
ஆன்ம விருட்சத்திலிருந்து
ஆருடைய சருகு
உதிருமோ
ஆருடைய ஓலை
துளிர்த்தெழுமோ..
உன்னுடைய அரிசி
உண்டு முடியுமோ
அவனுடைய அர்ஷில்
அடைக்கலம் கிடைக்குமோ
மண்ணுக்கு வருவதும்
விண்ணுக்குப் போவதும்
எழுதித் தீர்க்கும்
இந்த இரவில்,
எனக்காக
போட்ட ரொட்டி
பிளந்து விடுமோ...?
0
✍️ தீரன்..

Tuesday, May 3, 2022

5 கவிதைகள்

 Go Home Gota

∞∞∞∞∞∞∞∞∞∞

இனிமேலும் நீயிருந்தால் கோட்டா 
இலங்கை உருப்பட மாட்டா
இருப்பதை சுருட்டினாய்
இனங்களை வெருட்டினாய் 
இலங்கைக்கு காட்டு நீ டாட்டா

கோத்தா கோத்தா கோ ப்பயா
கோதாரி வேலதான்பா த்தயா
கொடுங்கோல் உந்தன் 
கொடும்பாவி எரியுது
கோபிக்காத ஆள்மாறு மா த்தயா

கா கா கா கப்புடு காக்கா
கூ கூ கூ கூப்பிடு சோக்கா
டீக்கா உடையணிந்து
டாக்கா சால்வை போட்டு
காக்காதம்பி எல்லாமே டூக்கா

கிளம்பு நீ கிழட்டு மைனா
கிளப்பின காசங்கே நைனா?
கிண்டக் கிண்ட ஊழல்
கிறுகிருக்குது மண்ட
கிட்டவும் நெருங்காது சைனா.0
00


வாழ்த்துக்கள்
வாழ்த்துச் சொல்ல ஒரு
வண்ணப் பூங்கொத்து
வாங்கி வந்தேன்
வாசலுக்கு..
வரவேற்கவில்லை நீ

உன் முற்றத்தில்
ஒரு கோலமிட்டு
மூன்று புள்ளி வைத்தேன்
மொத்தத்தில்
அள்ளி எறிந்து விட்டுச்
சென்றதுமேனோ...

என்
கவிதையைக் கூடக் கேட்காமல்
ஏனோ
கதவுகளைச் சாத்தினாய்

ஒரு
புன்னகை கேட்டதற்காகவா
இப்படிப்
புண்படச் செய்தாய்..

காகம், கோ ஹோம்
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

குருட்டுப் பறவை
இருட்டில் இருக்குது
விரட்டும் குரலில்
மிரட்டிப் பார்க்குது

புரட்டிப் பணத்தைப் 
பதுக்கி வைக்குது
சுருட்டிய பணத்தை
பிளைட்டில் ஏத்துது

பகட்டுப் பதவியைத் 
துறக்க மறுக்குது 
முரட்டுக் கும்பலை
இறக்கி மிரட்டுது

உருட்டும் விழியால் 
திருட்டு முழிக்குது
விரட்டும் குரலை
அடக்கப் பார்க்குது

மிரட்டும் மக்கள்
புரட்சி வெடிக்குது
விடியல் கோஷம் 
வானம் பிளக்குது.

வரட்டும் மாற்றம்
தரட்டும் என்ற
புரட்சிக் கீதம்
உரத்துக் கேட்குது
0

Monday, April 25, 2022

சிறுவர் பாடல்கள்

 ஸ்ரீலங்கா


சிறியநாடு நமது நாடு

சிறிலங்கா எங்கள் நாடு


 உரியநாடு ழூன்று இனமும்

பிறந்தநாடு சிறந்த நாடு


அரியநாடு அனைத்து வளமும்

அமைந்தநாடு அழகுநாடு


வெற்றி சுதந்திரம் வென்றநாடு

இரத்தினதுவீபம்  எங்கள்நாடு


சுற்றிச் சமுத்திரம் சு10ழ்ந்தநாடு

சுந்தர இலங்கை எம்தாய்நாடு.


000


விண்வெளி


பரந்து விரிந்த விண்வெளியே- உன்னில்

போதிந்து இருக்கும் புதுமைகளை கூறிடுவாயே..


எண்ணற்ற கோள்கள் மிதப்பதுவும்

எங’கனும் அவையெலாம் தொங்குவதும்

எண்ணற்ற விண்மீன்கள் நீந்துவதுவும்

கவினுறும் காட்சிகளாய் தெரிவதுவும்


பால்வீதி பலதூரம் பாய்வதுவும்

பகலிரவு மாறிமாறிச் சுழலுவதும்

நீள்வெளி  யாய்வானம்  விரிவதுவும்

நிலமெல்லாம் மழையருவி பொழிவதுவும்..


கோடிமின்னல் பளிச்சிட்டு முழங்குவதும்

குவலயத்தைப் பேரிடிகள் குலுக்குவதும்

கூடிவரும் மேகங்கள் கலைவதுவும்

முதலொளி எங்ஙனுமே பரவுவதும்..


புரந்து விரிந்த விண்வெளியே- உன்னில்

போதிந்து இருக்கும் புதுமைகளை கூறிடுவாயே..


000


கணினிp


ஒளிரும் திரையில் ஓருலகம்

மிளிரும் கணினி பயில்வோமே

தெளிவுறு உருவினில் தெரியவரும்

அகிலத்தின் ரகசியம் அறிவோமே..


விரிந்திடும் வையக வலையினிலே

வியப்புறு செய்திகள் காண்போமே

தெரிந்திடும் இணையத் தளத்தினிலே

உலவியே தகவல்கள் அறிவோமே


மென்பொருள் வன்போருள் தெரிந்திடுவொம்

கண்ணுறு அய்க்கண்கள் காண்போமே

சுட்டியின் அசைவினில் அகிலமெலாம்

சுற்றியே வரலாம் தோழர்களே…


000

நிலா


நிலா.. நிலா..

எங்கே நீ போகிறாய்...?

பூமியினைச் சுற்றிவரப் போகிறேன்

புதுமைகள் கண்டுவரப் போகிறேன்.


நிலா.. நிலா..

எங்கே நீ போகிறாய்...?

சு10ரியனைச் சுற்றி வரப் போகிறேன்

சோபிதங்கள் சொல்லி வரப் போகிறேன்


நிலா.. நிலா..

எங்கே நீ போகிறாய்...?

கிரகங்களைக் கண்டுவரப் போகிறேன்

கிரமமான பாதையிலே போகிறேன்.


நிலா.. நிலா..

எங்கே நீ போகிறாய்...?

பால்வீதியைப் பார்த்துவரப்போகிறேன்

வால்வெள்ளியை வாங்கிவரப் போகிறேன்.


நிலா.. நிலா..

எங்கே நீ போகிறாய்...?

வட்டமான வானவில்லைக் கொண்டுவந்து

வடிவான பிள்ளை உனக்குத் தரப் போகிறேன்.


000


தொலைபேசிp


கிறீங்….கிறீங்…

ஹலோ…ஹலோ…


முணியடிக்குது ஒரு கருவி

மனிதருக்கு வருது செய்தி

ஒலியெழுப்பும் அக் கருவி

உடனுக்குடன் பேசுது விரும்பி

கிறீங்….கிறீங்…

ஹலோ…ஹலோ…



செல்லுமிடமெல்லாம் செய்தி

செல்லிடப்பேசியொரு கருவி

அனுப்பிடும் பலகுறுஞ்யெ;தி

அனுப்புநர் மகம்காணும் வசதி

கிறீங்….கிறீங்…

ஹலோ…ஹலோ…



ஆகாயஅலைகளில் ஊடுறுவி

ஆட்களை அடைந்திடும் தொலையருவி

ஆஹாää அமைத்தான் அலக்சான்டர்

குpரகம்பெல்லை வாழ்த்துவோம் உலகமாந்தர்...

கிறீங்….கிறீங்…

ஹலோ…ஹலோ…

000



அஞ்சல் அலுவலகம்.


அஞ்சல் அலுவலகம் சென்றிடலாம்.

அலுவல்கள் பலவும் ஆற்றிடலாம்.


முத்திரை வாங்கி ஒட்டிடலாம்.

முழுவிடமும் கடிதங்கள் அனுப்பிடலாம்.

அஞ்சல்அட்டைகள் வாங்கிடலாம்.

அதிலேயே எழுதி அனப்பிடலாம்.


விரைவுத் தந்திகள் கொடுத்திடலாம்.

விரும்பும் பணமும் அனுப்பிடலாம்

விரைந்துவருமத் தபாற்பையில்

இருந்து மடல்கள் பெற்றிடலாம்.


தோலைநகல் செய்திகள் பார்த்திடலாம்

தொலைபேசி எங்கும் பேசிடலாம்.

ஆயிரம் சேவைகள் ஆற்றிடும்

அஞசல் திணைக்களம் வாழியவே…!


000




சுனாமி


வெட்டவெளி ஆகாயத்தில்  வட்டவடிவான பூமிப் பந்தின்

விட்டத்தடிக் கடலுக்குள்ளே பீறிட்டெழுந்திடும் சுனாமியடி


தட்டுமாறி  ஓட்டுப் பாறை சற்றுத் தூரத்தில் தள்ளிவிட

தட்டுப்பாறைத் தள்ளிக்கிளம்பி தந்திடும் சுனாமியைச் சொல்லியடி


கட்டுமீறிக் கடலெ ழுந்து முட்டிப்பிளந்திடும் மூர்க்க அலைகள்

எட்டிப்பாயும் பே ரலைகள் நாட்டையழித்திடும் சுனாமியடி..


தட்டழிந்து தாறுமாறாய் அட்டதிக்கும் ஆர்ப்பரிக்கும்

இட்டமுடன் எட்டிப்பாய்ந்து தாக்கியழித்திடும் சொல்லியடி


கிட்டக்கிட்ட ஆழிச்சுழல்  சுருட்டியிழுக்கும் ஆழிக்குள்ளே

கட்டவிழ்த்துக் கடுவேகத்துடன்  உச்சத்தில்  பாயும்    சுனாமியடி


கட்டுப்பாட்டை மீறிக்கடல் திட்டுமணல் ஏறிவரும்

கெட்டலைந்து ஊரையடித்து ஆழிக்கோள் காவுகள் கொள்ளுமடி


நாட்டையழித்த மூர்;க்கச் சுனாமியைப் பாட்டில் சொன்னவர்தமக்குள்ளே

ஏட்டில்வடித்து  நாட்டுக்களித்தவன் பாட்டில் தீரனென்று சொல்லியடி..




வாழும் பாவலரே

 பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

*************************************

ஊனாகி யூனிலுயி ராகியெவ்வு லகுமாயொன்றா யிரண்டுமாகி

உள்ளாகி வெளியாகி் யொளியாகி யிருளாகி ஊருடன் பேருமாகி

கானாகி மலையாகி வளைகடலு மாகிமலை

கானக விலங்குமாகி

கங்குல் பகலாகி மதியாகி ரவியாகி வெளி

கண்ட பொருளெவையு மாகி

நானாகி நீயாகி யவனாகி யவளாகி

நாதமொடு பூதமாகி

நாடுமொளி புரியவடி யேனுமுமை

நம்பினேன் நன்மை தந்தா ளுதற்கே

வானோரு மடிபணித லுள்ளநீர் பின்றொடர

வள்ள லிறஸூல் வருகவே

வளருமருள் நிறைகுடி வாழுமென் னிரு

கண்மணியே முஹ்யித்தீனே!

-------------------,இது  குணங்குடி மஸ்தான் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் பாடல்... அன்னவர்களின் பாடலை இறை துதியாகக் கொண்டு .......

கவுரமிக்க தலைவர்- கண்ணியமிக்க  பிரதம அதிதிகள்- உரையாளர்கள்- கவிஞர்கள்- கற்றறிந்த  சபையினர்  -- அறிவிப்பாளர்- மைக்கு செட்டுக் காரர்  அனைவருக்கும்  எனது  இனிய  சலாமும் சொபனங்களும் இனிய  தியாகத் திருநாள்  வாழ்த்துக்களும் உரித்த்தாகுக.

அஸ்ஸலாமு அலைக்கும் –வணக்கம்

வாழும்  பாவலரே ...இதைக்

கேளும்  பாவலரே .....

௦௦

என்னை கவிதை பாடச் சொல்கிறார்  தலைவர்

ஒரு  ஊமையனை பாட்டுப் பாடச் சொல்கிறார்  தலைவர்

ஒரு  ஈ மெயிலை கொம்போஸ் செய்து   

ஒரு  ஆமையிலே  கொண்டு போகச் சொல்கிறார் .....

ஒத்தைக் கால் முடவனை 

ஒலிம்பிக்கில்  ஓடு  என்கிறார்

இதெல்லாம்  நடக்கிற  காரியமா ...?

இதெல்லாம்  நடக்கிற  காரியமா ...?

வாழும்  பாவலரே ...இதைக்

கேளும்  பாவலரே .....

 

௦௦

இது என் கவிதை நேரம்

கதைத்திருந்தது போதுமினிக்

காதுக்குள் கொஞ்சம் கவிதை ஊற்று

நீ ஒரு  கவி ஊற்று என்கிறார்  தலைவர்

 

நீ தீரன்.. கவிகளில்  சூரன்..

கதைகளில் வீரன்...சொந்த  ஊரன்..

ஒரு  கவிதை கூறேன் .. 

என்கிறார் தலைவர்;,,,,ஐயஹோ...

௦௦

 

என் இலக்கிய  வேர் பாய

நீர்  விட்ட 

சேர்  இந்தப்

பீர்  முகம்மது

சேர்.தான்...

எனவேதான்

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்தேன்

ஆனால்  கவிதை கொண்டு வரவில்லை

 

௦௦

இந்த நிகழ்ச்சிக்கு பின்னால்

புகழ்ச்சியும்  உண்டு..இகழ்ச்சியும்  உண்டு...

வாழும்  பாவலரே ...இதைக்

கேளும்  பாவலரே .....

௦௦

 

அழைப்பிதழ் அடிக்க

அச்சுக் கந்தோருக்குப் போனேன் – இடையில்

பெச்சுப்  போனது   பைக்கு

அச்சுப் பெருநாள் காலம்

பெச்சுக் கடை  பூட்டு – ரோட்டோரம்

வெச்சுப் பூட்டி விட்டு

ஓட்டோவில் போவோம் என்று

பைக்குள்  கையை  விட்டால்

அஞ்சு சதமும் இல்லை

அச்சுப் பெருநாளைக்கு

அச்சுப் பலகாரம்  செய்ய

மிச்சம் மீதி இல்லாம –பொஞ்சாதி

பக்கட்டைக் குடைஞ்சிருந்தாள்

பக்கட்டுக்குள் பொன்னாங்கண்ணி

கடைஞ்சிருந்தாள் .....

 

வாழும்  பாவலரே ...இதைக்

கேளும்  பாவலரே .....

௦௦

அந்த  நேரம் தொடக்கம்

இந்த நேரம் வரையும்

ஒரே டென்ஷன்தான் ...என்ன  செய்ய

நான் பென்சன் ..ஆள்..

௦௦

எனவே

கவிதை  ஒண்டும்  எழுதவில்லை..

ஆயினும்

ஒரு  கவிதை கொண்டு  வந்துள்ளேன்

௦௦  

தென் கிழக்கின்  உமர்கையாம்

அரும்பு மீசை தத்துவஞானி

காணாமற் போன ஒரு தங்கக் காசு

என்றும் எம் மனதில்

வாழும் பாவலர்  எழுதிய

ஒரு கவிதை கொண்டு வந்துள்ளேன் ...

கேளுங்கள்

௦௦

 

இரணக் கோல்

இரணக் கோல்

 

காக்கா  அக்கம்புதன்னைக்

காலால்  மிதிக்காதே

ஏக்கம் மிகுந்த  எங்கள்

இரணக் கோல்..கதிரடிக்கும்

கம்புதான்  எண்களினைக்

காக்கும் படை –அதுவே

நம்பிக்கை தரும் ஒரு கோல்

நாளை  சில பேருக்கு

சூட்டுக் கோல்  ஆகிடலாம்

சுரணை வருமட்டும்எங்கள்

பாட்டைச் சுரண்டுபவர்

பழிவாங்கப் படுவர்

இந் நீட்டுக் கோல்  அவர்களது

நெஞ்சைத் திருத்திடலாம்

கட்டாதே பல்லைச்  ச்சே

காக்கா உன்  காலை  எடு.

 

௦௦

மிக்க  நன்றிகள்...

அஸ்ஸலாமு அலைக்கும்  வணக்கம்