பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
*************************************
ஊனாகி யூனிலுயி ராகியெவ்வு லகுமாயொன்றா யிரண்டுமாகி
உள்ளாகி வெளியாகி் யொளியாகி யிருளாகி ஊருடன் பேருமாகி
கானாகி மலையாகி வளைகடலு மாகிமலை
கானக விலங்குமாகி
கங்குல் பகலாகி மதியாகி ரவியாகி வெளி
கண்ட பொருளெவையு மாகி
நானாகி நீயாகி யவனாகி யவளாகி
நாதமொடு பூதமாகி
நாடுமொளி புரியவடி யேனுமுமை
நம்பினேன் நன்மை தந்தா ளுதற்கே
வானோரு மடிபணித லுள்ளநீர் பின்றொடர
வள்ள லிறஸூல் வருகவே
வளருமருள் நிறைகுடி வாழுமென் னிரு
கண்மணியே முஹ்யித்தீனே!
-------------------,இது குணங்குடி மஸ்தான்
ஸாஹிப் வலிய்யுல்லாஹ் பாடல்... அன்னவர்களின் பாடலை இறை துதியாகக் கொண்டு .......
கவுரமிக்க
தலைவர்- கண்ணியமிக்க பிரதம அதிதிகள்-
உரையாளர்கள்- கவிஞர்கள்- கற்றறிந்த
சபையினர் -- அறிவிப்பாளர்- மைக்கு
செட்டுக் காரர் அனைவருக்கும் எனது
இனிய சலாமும் சொபனங்களும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்களும் உரித்த்தாகுக.
அஸ்ஸலாமு அலைக்கும் –வணக்கம்
வாழும் பாவலரே ...இதைக்
கேளும் பாவலரே .....
௦௦
என்னை
கவிதை பாடச் சொல்கிறார் தலைவர்
ஒரு ஊமையனை பாட்டுப் பாடச் சொல்கிறார் தலைவர்
ஒரு ஈ மெயிலை கொம்போஸ் செய்து
ஒரு ஆமையிலே
கொண்டு போகச் சொல்கிறார் .....
ஒத்தைக்
கால் முடவனை
ஒலிம்பிக்கில் ஓடு
என்கிறார்
இதெல்லாம் நடக்கிற
காரியமா ...?
இதெல்லாம் நடக்கிற
காரியமா ...?
வாழும் பாவலரே ...இதைக்
கேளும் பாவலரே .....
௦௦
இது
என் கவிதை நேரம்
கதைத்திருந்தது
போதுமினிக்
காதுக்குள்
கொஞ்சம் கவிதை ஊற்று
நீ
ஒரு கவி ஊற்று என்கிறார் தலைவர்
நீ தீரன்..
கவிகளில் சூரன்..
கதைகளில்
வீரன்...சொந்த ஊரன்..
ஒரு கவிதை கூறேன் ..
என்கிறார்
தலைவர்;,,,,ஐயஹோ...
௦௦
என்
இலக்கிய வேர் பாய
நீர் விட்ட
சேர் இந்தப்
பீர் முகம்மது
சேர்.தான்...
எனவேதான்
கூப்பிட்ட
குரலுக்கு ஓடி வந்தேன்
ஆனால் கவிதை கொண்டு வரவில்லை
௦௦
இந்த நிகழ்ச்சிக்கு
பின்னால்
புகழ்ச்சியும் உண்டு..இகழ்ச்சியும் உண்டு...
வாழும் பாவலரே ...இதைக்
கேளும் பாவலரே .....
௦௦
அழைப்பிதழ் அடிக்க
அச்சுக்
கந்தோருக்குப் போனேன் – இடையில்
பெச்சுப் போனது
பைக்கு
அச்சுப் பெருநாள்
காலம்
பெச்சுக் கடை பூட்டு – ரோட்டோரம்
வெச்சுப் பூட்டி
விட்டு
ஓட்டோவில் போவோம்
என்று
பைக்குள் கையை
விட்டால்
அஞ்சு சதமும் இல்லை
அச்சுப் பெருநாளைக்கு
அச்சுப் பலகாரம் செய்ய
மிச்சம் மீதி இல்லாம –பொஞ்சாதி
பக்கட்டைக் குடைஞ்சிருந்தாள்
பக்கட்டுக்குள்
பொன்னாங்கண்ணி
கடைஞ்சிருந்தாள்
.....
வாழும் பாவலரே ...இதைக்
கேளும் பாவலரே .....
௦௦
அந்த நேரம் தொடக்கம்
இந்த நேரம் வரையும்
ஒரே டென்ஷன்தான்
...என்ன செய்ய
நான் பென்சன் ..ஆள்..
௦௦
எனவே
கவிதை ஒண்டும்
எழுதவில்லை..
ஆயினும்
ஒரு கவிதை கொண்டு
வந்துள்ளேன்
௦௦
தென் கிழக்கின் உமர்கையாம்
அரும்பு மீசை
தத்துவஞானி
காணாமற் போன ஒரு
தங்கக் காசு
என்றும் எம் மனதில்
வாழும் பாவலர் எழுதிய
ஒரு கவிதை கொண்டு
வந்துள்ளேன் ...
கேளுங்கள்
௦௦
இரணக் கோல்
இரணக் கோல்
காக்கா அக்கம்புதன்னைக்
காலால் மிதிக்காதே
ஏக்கம் மிகுந்த எங்கள்
இரணக்
கோல்..கதிரடிக்கும்
கம்புதான் எண்களினைக்
காக்கும் படை –அதுவே
நம்பிக்கை தரும் ஒரு
கோல்
நாளை சில பேருக்கு
சூட்டுக் கோல் ஆகிடலாம்
சுரணை
வருமட்டும்எங்கள்
பாட்டைச் சுரண்டுபவர்
பழிவாங்கப் படுவர்
இந் நீட்டுக்
கோல் அவர்களது
நெஞ்சைத்
திருத்திடலாம்
கட்டாதே பல்லைச் ச்சே
காக்கா உன் காலை
எடு.
௦௦
மிக்க நன்றிகள்...
அஸ்ஸலாமு
அலைக்கும் வணக்கம்
No comments:
Post a Comment