நாலுமணிப்பூ
-------------
சின்ன மலரே
எந்தன் வாசலில் மலர்ந்த
வண்ண மலரே
என்ன மலரோ
உனக்கு என்ன பெயரோ
வாசல் முழுவதும் நீ
வாசம் வீசுகிறாய்
நாலுமணிப் பூவோ நீ
நாலு பேரும் இரசிப்பதனால்
மேனியெல்லாம் கூனி
நாணி நிற்கிறாயோ..
வனப்பெல்லாம் சில நாளில்
வாடி விடலாம் - அந்த
நினைப்பெல்லாம்
ஏது உனக்கு?
கர்வம் கொண்டு நீ
காற்றினிலே ஆடுகிறாய்
சின்னஞ்சிறு வாழ்க்கை
இதில்
பென்னம் பெரிய
எண்ணம் உனக்கு.
விரைவில்,
நீ வாடி உதிர்தல் கூடும்
அந்த இடத்தில்,
இன்னொரு பூவும் வரலாம்.
பயணம் நிச்சயம்
புறப்படத் தயாராகு,
என் வண்ணச் சிறு பூவே...
0
தீரன்