கருணை
நெற்றிக்கு நேரே
சிற்றெறும்பு ஒன்று.
நெற்றியை வைத்தால்
செத்து விடும் பாவம்..
சற்றுத் தாமதிக்கிறேன்
சற்றும் அசையவில்லை அது
நெற்றியைத் தரையில்
வைக்காது,
நிமிர்ந்து இருப்புக்கு வருகிறேன்..
சுஜூது கூடுமோ
சுவர்க்கம் தூரமோ
அடுத்த சுஜூதுக்குப் போகிறேன்
படுத்த எறும்பைக் காணவில்லை
உன் பிள்ளைகளைக் காண
நீ சென்றிருக்கலாம்
உன் கணவனைக் கூடவும்
நீ போயிருக்கலாம்
என் தொழுகை பிழைத்தது,
உன் உயிர் பிழைத்தது.
O
No comments:
Post a Comment