குணங்குடி
மஸ்தான் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் பாடல்
*************************************
ஊனாகி
யூனிலுயி ராகியெவ்வு லகுமாயொன்றா யிரண்டுமாகி
உள்ளாகி
வெளியாகி் யொளியாகி யிருளாகி ஊருடன் பேருமாகி
கானாகி
மலையாகி வளைகடலு மாகிமலை
கானக
விலங்குமாகி
கங்குல்
பகலாகி மதியாகி ரவியாகி வெளி
கண்ட
பொருளெவையு மாகி
நானாகி
நீயாகி யவனாகி யவளாகி
நாதமொடு
பூதமாகி
நாடுமொளி
புரியவடி யேனுமுமை
நம்பினேன்
நன்மை தந்தா ளுதற்கே
வானோரு
மடிபணித லுள்ளநீர் பின்றொடர
வள்ள
லிறஸூல் வருகவே
வளருமருள்
நிறைகுடி வாழுமென் னிரு
கண்மணியே
முஹ்யித்தீனே!
-------------------
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா
னிர்ரஹீம்
குன்னென்ற சொல்லால்
குவலயங்கள்
படைத்தளித்தானே ..வல்லவன்
எல்லாமுமாய் காட்சி தரும்
திருக் காட்சியை
என்னென்பேன் அவன் மாட்சியை...
அவன் புகழ் ஓதுவோம்
...
௦௦
கரவாகுச் சந்தியில்
கதைத்திருக்க வந்தோம்
உறவுகள் வலுப்பட
உன்னதக் கவிதைகள்
உரைத்திருக்க
வந்துள்ளோம் ...
௦௦
அலைகடல் எறியும் வங்கக் கடல் பின்னால்
அவை ஆளும் தங்கத்
தலைவர் முன்னால்
எடுத்துச் சில பாட்டு
தொடுத்துக் கோர்த்து
சூட வந்த
என் கவிதை தோழமைகள் அனைவருக்கும்
சாந்தி சமாதானம்
...நிலவுக ....
௦௦
இது
என் கவிதை நேரம்
கதைத்திருந்தது
போதுமினிக்
காதுக்குள்
கொஞ்சம் கவிதை ஊற்றும் நேரம்
என்று
கூப்பிட்டார் தலைவர்
சாப்பிட்டாரோ காலையில்
தெரியாது...
கூப்பிட்ட
குரலுக்கு ஓடி வந்தேன்
ஒரு-
நாட்பட்ட கவிதை கைவசம் கொண்டு..
என்
கவிதை வாசித்து முடித்ததும் –
இனி
ஒரு போதும் என்னை
சபைக்கு அழைக்க மாட்டார்
அழைத்தால்
பிழைக்க மாட்டார்..இனி நம்
விசயத்தில் மூக்கை
நுழைக்க மாட்டார்.
௦௦
கிழட்டுக் கவிஞர்
சிலர் கிலுட்டுக் கவி தருவார்
மலட்டுக் கவிஞரும்
ஒரு மாங்கா மடையரும்
உலக்கைப் புலவரும் ஆக
–மூன்று நாலுபேரே
புல்லட்டுக் கவி
சொன்ன காலம் போச்சு –இப்போ
புதுப் புயல்களாய்
பாட்டுச் சுனாமியாய்
புறப்பட்டு வந்தனரே
நம் புதுக் கவிஞர்கள்...
வரவேற்று மகிழ்கிறோம்கரவாகு சந்திக்கு..
கனிவாகச்
சந்திக்க.... கல்புகள் இனிக்க ....
௦௦
இங்கு
சந்தக் கவிஞரும்
அந்தக் கவிஞரும் இந்தக் கவிஞரும்
என்- சொந்தக் காரக்
கவிஞரும் உள்ளார்கள்..ரெண்டொரு
பந்தக் கவிஞரும்
பதுங்கி இருக்கின்றார்..
எந்தக் கொம்பர்
இருந்தால் எனக்கென்ன ...
நான் தீரன்..
கவிகளில் சூரன்..
கதைகளில்
வீரன்...சொந்த ஊரன்..
ஒரு கவிதை தாரன் .. சுவைத்துப்
பாரன் ...
௦௦
இது
ஒரு நாட்டுக்கவி
ஏட்டுக்களில்
எழுதாத சீட்டுக்கவி
பக்கத்து
வீட்டில் ஒட்டுக்கேட்ட
வெட்டுக்கவி
௦௦
இந்தக்
கவிதை கேளாத காதுள்ளோர்
பின்கதிரை
வiழியாக
வெளியாக
வெளியேறிச் சென்று
ஒரு
பம் பண்ணிக்கிட்டும் வரலாம்
இல்லை
ஒரு
தம'; பத்திக்கிட்டும்
வரலாம்.
கவிதை
கேட்கும் காதுள்ளோர்
கதிரைகளில்
சாய்ந்து அமர்ந்திருங்கள்- இது
சாய்ந்த-
மருது ...இருங்கள்...
கவித்
தேன் பருகி கொஞசம் மாய்ந்திருங்கள்
௦௦
கள்ளக்
கோழி
என்
கவிதையின் தலைப்பு
௦௦
ஆத்தப்பாக்
கிழவனுக்கு
மூத்தாப்பாட
வயசு//
ஆத்தப்பாக்
கிழவனுக்கு
பேத்தி
இருபது வயசு.
ஆர்த்து இழுக்கும் மார்பு
ஆரையம்
ஈர்க்கும் அழகு
பொட்டணிக்கார
யாவாரிக்கு
சட்டெனப்
பேசி முடிச்சான்
ஆறுமாதம்
அவன் இருந்தான்
தீருமட்டும்
தின்று விட்டு
ஊரு
போனான்- திரும்பி
வராமல்
தொலைஞ்சி போனான;//
சும்மா
கெடந்த சங்கை
ஊதிக்
கெடுத்த பாங்கை
எதிர்த்துக்
கிழவன் பாட்டுக்கு
இழுத்தான்
காதிக் கோட்டுக்கு//
வழக்கு
நடக்குது முடியல்ல
வெளக்கம்
நடக்குது வழக்கும் தீரல்ல//
பேத்தியப்
பார்த்துக் கெழவன்
பெரு
மூச்சவிட்டான்- ஆனா
புரிசன்
உட்டுப் போன
கவல
இல்லாம பேத்தி
தொட்டுப்
பூசுறாள் பவுடர்.- ராவேள
மாட்டுக்
குடில்ப் பக்கம்
மறைஞ்சாப்
போலவம் ஒரு சமிசயம்//
சக்குப்பட்ட
கிழவன்
பக்கெனப்
பிடிக்கத்
திட்டம்
போட்டான்..கெழவன்.//
பண்டிக்காவலுக்குப்
போறேனெண்டு
சாட்டுக்குச்
சொல்லிட்டு போய்க்கிட்டு
இருட்டுக்க
வந்து
மாட்டுக்குடிலுக்க
ஒழிச்சிட்டு இரிந்தான்//
கள்ளக்கோழி
புடிக்க வாற நாய
வெட்டிக்
கொல்ல வெட்டரிவாள் தீட்டி
மாட்டுக்குடிலுக்க
ஒழிச்சிரிந்தான்
நடுச்சாமம்
மட்டும் முழிச்சிரிந்தான்.//
நடுச்சாமம்
ஆகி நட்டநடு ராவையில
ஒரு
சீட்டிச்சத்தம் கேட்டிச்சு//
வீட்டுக்
கதவும் தொறந்திச்சு..
பேத்தி
வெளிய வந்திச்சு -வந்து
மாட்டுக்குடிலுக்க
பூந்துச்சு
ஓடன
ஒரு
கனப்புச் சத;தம் கேக்குது
ஒரு
ஆம்புள இருட்டுக்க பதுங்குது
அந்த
உருவமும்
மாட்டுக்குடிலுக்க
பூந்துட்டு //
குடிலுக்க
கசமுசகசமுசவெனச்
சத்தங்கள்
பசபசபசவென
கிசுகிசுப்புகள் ..
குசுகுசுவெனக்
கொஞ்சல்கள்//
ஆத்தப்பாக்
கிழவன்
ஆத்திரம்
கொண்டு -அருவாள
ஓங்கிக்
கொண்டு
பாஞ்சி
வந்தான்...
ஆர்ரா
வள்ளா... நீ ஆர்ரா வள்ளா
பார்ரா
வள்ளா ஒண்ட
கழுத்த
வெட்றன் பார்ரா வள்ளா//
கெழவன்
கத்திக்கிட்டு ஓடி வெர
கள்ளக்
கோழி புடிக்க வந்தவன்
துள்ளிஓடத்
திரும்ப
மல்லுக்கட்டி
கெழவனும் அவனும்
புல்லுக்கட்டு
முழுதும்
தள்ளுப்பட்டு
அள்ளுப்பட
புரளப்புரள
உருண்டு பிரண்டு//
கெழவனத்
தள்ளி உட்டுட்டு
மாட்டுக்
கவுட்டால் புகுந்துக்கிட்டு
ஓடின
கள்ளன்ட சொத்தையில
டோச்சி
லைற்ற அடிச்சிட்டான்
டோச்சி
லைற்றால அடிச்சிட்டான்.//
பளிச்செனப்
பாய்ஞ்ச வெளிச்சத்துல
பளிச்செனத்
தெரிஞ்ச அவன் ஆரு..//
உட்டுட்டுப்
போன புரிசன்தான்- பேத்திய
உட்டுட்டுப்
போன புரிசன்தான்-
வெறச்சிப்
போன கெழவன்
நரச்சிப்
போன மணடையப்
பொத்திக்கிட்டுக்
குந்திட்டான்
கத்தியக்
கீழ போட்டுட்டான்....//
இனி
என்ன செய்ய...
இனி
என்ன செய்ய...
இதுக்கு மேலே என்ன
சொல்ல...
சொல்வதற்கு ஒன்றும் இல்ல
௦௦
நன்றி..
அஸ்ஸலாமு
அழைக்கும்- வணக்கம்
--------------------------------------------------------
No comments:
Post a Comment