. பிணந்தின்னி
கத்தாதே காகமே
வந்து என் மலத்தைக்
கொத்தாதே காகமே
சத்தான கவிதை
உனதெனச் சாற்றாதே காகமே
காதில் பூச் சுற்றாதே
ஆகாயத் தோட்டியே
சபையில் வந்து
சும்மா சுத்தாதே காகமே
இலக்கியம் இதுவெனக்
கத்தி
எத்தாதே காகமே
குப்பியைக் கிளப்பிக்
குந்தாதே வரிசையில்
குடைந்து குடைந்து
குத்தாதே காகமே
கவிதையின் தரம்
காலம் சொல்லும்
நீ சொல்லாதே
வீணாக வந்தென்
வாசலில் தெத்தாதே
காகமே..
0
No comments:
Post a Comment