அந்திமம்
--------------
பழுத்த ஓலை நீ
பார்த்திருக்க விழுவாய்
இழுத்து உன்னை
எங்கோ எறிவர்
பசுங்குருத்தாய்
நீயிருந்த நேரம்
சாவோலை ஒன்று
விழுந்திருக்கும்
பரிகசித்து நீ மெல்ல
சிரித்திருக்கவும் கூடும்
கழுத்து வரை வந்து
எழுத்து முடிய
இழுத்துக் கொள்ளுதல்
இயல்பே..
இன்று நீயும் காவோலை
இற்று விழும் காலை
மேலே இன்னொரு
இளைய ஓலை சிரிக்கிறது
இது கண்டு
இயற்கையும் மெல்ல
நகைக்கிறது..
O
தீரன்
No comments:
Post a Comment