Friday, February 2, 2024

கவிதாவஸ்தை

 கவிதாவஸ்தை

---------====


பறந்து பறந்து

என் தலைக்குள்

கொத்திக் குதறுகிறது..


சிறகுகள் விரித்து

நெஞ்சில் அடிக்கிறது

தீராவெளி எங்கும் திரிந்து

திரும்பவும் வந்து

மனக் கிளையில் குந்துகிறது..


சொண்டு நிறையச், சொற்கள்

கொண்டு வந்து

வாசலில் இறைக்கிறது..


கண்ணி வைத்தும்

கண்ணில் வைத்தும் கூட,

தெத்தித் தாவி

எத்தனம் காட்டி

ஏமாற்றுகிறது..


ஒன்றுக்கும்

விடாது போலிருக்கிறதே..


ச்சூய்,

இந்தக்


 கவிதைப் பறவை. O

Oo

தீரன்.

No comments:

Post a Comment