Sunday, March 29, 2026
கூவல், சேவல்
வயல் பாட்டு
வயல் பாட்டு
மழைக்கள்ளன்
மழைக்கள்ளன்
பயணம்
பயணம்
Tuesday, February 3, 2026
அலைதல்
அலைதல்
நிலையாமை
நிலையாமை
எத்தனை கோடி
நீர்க் குமிழிகள்
இந்த
ஏகப் பெரும் சமுத்திரத்தில்
வினாடியில் வெடிப்பவை
நிமிடத்தில் நிலையற்றுப்
போனவை...
அற்ப வாழ்வில்
அழகுற வாழ்ந்து மடிந்தவை
சரித்திரம் படைத்து விட்டு
சமுத்திரத்தில் மறைந்தவை
வெடித்துச் சிதறும்
வேளை அறியாமல்
வனப்புடன் வாழ்பவை
எத்தனை எத்தனை கோடி
நீர்க் குமிழிகள் இந்த
ஏகப் பெரும் சமுத்திரத்தில்
ஆதம் நபியின் காதல் கணக்கு
ஆதம் நபியின் காதல் கணக்கு
ஆதம் நபியின்
காதல் கணக்கில், எத்தனை
வீதம் மீதம்
இருக்கிறது உன்னிடம்..
வேதம் சொன்ன காதலில்
ஒரு வீதம் ஆவது
எஞ்சி இருக்கிறதா
மாதம் முழுவதும்
வணங்கிய போதும்
இறை நாதம்
காதில் கேட்கிறதா..
ஓதும் நேரம்
மனம் ஒன்றாமல்,
ஏதும் புரிகிறதா..
சூதும், வாதும்
சேர்ந்திருக்கையில்
ஒரு போதும்
அந்த நாதம்
கேட்பதற்கில்லை.. போ..
0
காலங் கொத்திப் பறவை
காலங்
கொத்திப் பறவை
என்
காதலைக்
கௌவிப்
பறந்த
காலங்
கொத்திப் பறவையே,
ஒன்றை
தெரிந்து கொள்..
எத்தித்
திருடிச் சென்று
என்
காதலைக்
கொத்தித்
தின்ற
பாவத்தால்,
ஒவ்வொன்றாக
உன்
சிறகுகள்
உதிர்ந்து
மொட்டைக்
காலம் ஆகி
நீ
காலமாகி
விட்ட
போதிலும்
என்
காதல்
தந்த
நினைவுகள்
அழியாது
என்னுடன்
வாழ்ந்திருக்கும்
என்பதறியாய்
நீ..
ஓ..
காலங் கொத்திப் பறவையே..
O