அலைதல்
========
அலைகளே,
அசையாதீர்கள்
அமைதி கொள்ளுங்கள்..
பாய்வதை
நிறுத்திக் கொள்ளுங்கள்
ஆணவம் கொண்டு
ஆடாதீர்கள்
நுரைப்பல் காட்டிச்
சிரிக்காதீர்கள்
கரையேறி வந்து
கரைச்சல் தராதீர்கள்
ஆணலை பெண்ணலை என்ற
ஆடலை நிறுத்துங்கள்
ஊருக்குள் உரச வரும்
ஊடலையும் விடுங்கள்
தலைக்கனம் கொண்டு,
தரையுடன் மோதும் உங்கள்
தலைகளைத் தணியுங்கள்
கணப்பொழுதில்
கடலுக்குள் கரைந்து
காணாமல் போகும் உங்களுக்கு
இத்தனை கர்வம் ஏன்..
பேரின்பக் கடலுக்குள் மூழ்கி
ஞான முத்தெடுக்கும்
நிலை இதுவோ..
நிறுத்திக் கொள்ளுங்கள்
நிதானம் பெறுங்கள்
O
No comments:
Post a Comment