Tuesday, February 3, 2026

காலங் கொத்திப் பறவை

 

காலங் கொத்திப் பறவை

 

என் காதலைக்

கௌவிப் பறந்த

காலங் கொத்திப் பறவையே,

 

ஒன்றை தெரிந்து கொள்..

எத்தித் திருடிச் சென்று

என் காதலைக்

கொத்தித் தின்ற

பாவத்தால்,

 

ஒவ்வொன்றாக உன்

சிறகுகள் உதிர்ந்து

மொட்டைக் காலம் ஆகி

நீ காலமாகி

விட்ட போதிலும்

 

என்

காதல் தந்த

நினைவுகள் அழியாது

என்னுடன் வாழ்ந்திருக்கும்

என்பதறியாய் நீ..

 

ஓ.. காலங் கொத்திப் பறவையே..

O

 

No comments:

Post a Comment