மண்மகள்
சந்திக்க
வருவேன்
ஒரு
தினம் உன்னை..
துணை
யாருமின்றித்
தனியாக..
தயாராக
நீ இருப்பாய்
படுத்துக்
கிடப்பேன்
உன்
மடிமீது
எடுத்து
அணைப்பாய்
உன்
மண் மேனி தழுவி..
அழுத்தி
மூடும் உன்
கரத்தின்
வெம்மையும்,
கொழுத்தி
எரியும் உன்
இதழின்
முத்தமும்
யாருக்கும்
தெரியாது..
நெருக்கி
அணைக்கும்
உன்
நெஞ்சின் வேகம்
என்
எலும்புகளை
முறிக்கும்
என்பதும் அறியார்.
ஆ.,
நீ
ஓர் அடக்கமான
பெண்
அல்ல..
நான்
அடக்கமான மண்.
O
No comments:
Post a Comment