Tuesday, February 3, 2026

பாதயாத்திரை

 

பாதயாத்திரை

 

எத்தனை காலடிகள்

எடுத்து வைத்த பாதவடிகள்

 

எண்ணி நடக்கவில்லை

எண்ணியும் நடக்கவில்லை

 

பாவப் பாதையில்

பயணித்தவை எத்தனை

 

பள்ளிவாசலுக்கு சென்றவை

எத்தனை..

 

கடந்த காலத்தை

நடந்து கழித்தவையும்

தப்படி வைத்துத்

தடம் பதித்தவையும்

 

எண்ணி நடக்கவில்லை

எண்ணியும் நடக்கவில்லை

 

பயணம் முடிந்தது

பாதையும் முடிந்தது

 

பாதங்களின்றி வந்து

படுத்திருக்கிறேன்

பாவம், என்

பாதம்...

O

 

No comments:

Post a Comment