மன்மத
வண்டு
ஓ., பொன்வண்டே,
எத்தனை
சோலைகள்
கடந்து
வந்தாய்
எத்தனை
மலர்களில்
நடந்து
வந்தாய்..
நீ
தொட்டு வந்த மலர்களில்
தேன்
சுரந்ததெத்தனை..
நீ
பட்டு வந்த பூக்களில்
தேன்
பருகாது
விட்டு
வைத்ததெத்தனை?
உன்
கட்டுடலில்
அவற்றின்
மகரந்தங்கள்
பட்டுத்,
தம்
கற்பினை இழந்த
கதைகள்
அறிவாயோ?
அவை
கண்ணீரில்
எழுதிய
கவிதைகள்
புரிவாயோ?
ச்சே,
விட்டு
விடு இந்த வேலையை
ஓரிதழில்
மட்டும்
பருகி வாழுதல்
ஒண்ணாதோ
உனக்கு?
O
No comments:
Post a Comment